மைத்திரிபால சிறிசேனவுக்கும் மஹிந்த ராஜபக்சவுக்கு மிடையில் முக்கிய சந்திப்பொன்று நாளை புதன்கிழமை கொழும்பில் இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப் படுகின்றது. இச்சந்திப்பு பெரும் பாலும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என ஸ்ரீலங்கா கடற்றொழில் அமைச்சர் நேற்று தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பு பெரும்பாலும் இருவருக்குமிடையில் தான் இடம்பெறும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளைக் களைவதை நோக்காகக் கொண்டே இச்சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது எனவும் அவர் கூறினார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சு. கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா குறிப்பிடுகையில், இச்சந்திப்பின்போது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள், எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் என்பன குறித்தும் இங்கு கலந்துரையாடப்படும் என்று குறிப்பிட்டார்.
குறித்த சந்திப்பின் காரணமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வீட்டிற்கு அனுப்புவதென டிலான் பெரேரா நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததனால் ஐக்கிய தேசிய கட்சியினர் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் சில முக்கிய உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
மகிந்தவிற்கும் ,மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பை நினைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மனமுடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக நியமித்து ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்துவதற்கு உதவி செய்தது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க
மாரதுங்க என்பதும் குறிப்பிடத்தக்கது.
மைத்திரிபால சிறிசேனவையும், மஹிந்த ராஜபக்ஷவையும் சந்திக்க வைப்பதற்கு ஏற்கனவே இரண்டு மூன்று தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு தடவை திகதி குறிக்கப்பட்டும் இறுதித் தறுவாயில் சந்திப்பு பிற்போடப்பட்டது இவ்வாறான சூழலி லேயே புதனன்று இச்சந்திப்பு இடம் பெறவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.