பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து முல்லையில் திரண்ட மக்கள்!

0
242

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் புறந்தள்ளி பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டமை மற்றும் தமிழ் சட்டத்தரணிகள், தமிழ் மக்கள் தாக்கப்பட்டதை கண்டித்து முல்லைத்தீவில் கண்டன ஆர்ப்பாட்டம் பெரும் எழுச்சியாக இடம்பெற்றது.

தமிழர் மரபுரிமை பேரவை, தமிழ் மக்கள் பேரவை நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம், பிரதேச மக்கள் சட்டதரணிகள் இணைந்து இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.இதில் முன்னால் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் யாழ்பல்கலை மாணவர்கள்,பொதுமக்கள் அரசியல் பிதிநிதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

இன்று காலை 11 மணிக்கு முல்லைத்தீவு பழைய வைத்தியசாலை (உண்ணாப்பிலவு வைத்தியசாலை) முன்பாக ஒன்று திரண்டு, பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று, அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர் மரபுரிமை பேரவை, தமிழ் மக்கள் பேரவை நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம், பிரதேச மக்கள் சட்டத்தரணிகள் இணைந்து இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.இதில் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் யாழ்.பல்கலை மாணவர்கள்,பொதுமக்கள் அரசியல் பிரதிநிதிகள் என பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் புறந்தள்ளி பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டமை மற்றும் தமிழ் சட்டத்தரணிகள், தமிழ் மக்கள் தாக்கப்பட்டதை கண்டித்தே முல்லைத்தீவில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here