யாழில் மின்சாரம் தாக்கியதில் தந்தை மகன் உட்பட மூவர்பலி!

0
316

Unavngivet2
யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் தந்தையும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 2.45 அளவில் சுன்னாகம் ஐயனார் கோவில் வெள்ளவாய்க்கால் ஒழுங்கையில் இடம்பெற்றது.

சுன்னாகத்தில் நேற்று பிற்பகலில் கடும் காற்றுடன் மழை பெய்தது. இதன் போது வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மேற்படி இருவரின் மீதும் மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதில் அந்த இடத் திலேயே இருவரும் துடிதுடித்து உயிரிழந்தனர். இச் சம்பவத்தில் 28 வயதான தந்தையும் 08 வயதான மக னுமே உயிரிழந்துள்ளனர்.

கடுங்காற்று மற்றும் இடி, மின்னலுடன் பெய்த அடைமழை காரணமாகவே மேற்படி மின்சார கம்பி அறுந்து விழுந்ததாக பொலிஸார் கூறினர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரு கின்றனர்.

யாழ். வடமராட்சி பிரதேசத்தில் வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு  இடம்பெற்ற இந்திர விழா நிகழ்வில் மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
sunnakam

குறித்த நிகழ்வில் தண்ணீர் பந்தல் நடத்திய வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியை சேர்ந்த சிவனடியார் நவரத்தினம் (வயது47)  என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த  நிகழ்வு வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் தீர்த்தத் திருவிழா முடிந்த பின்னர் வருடாவருடம் நடாத்தப்படும் நிகழ்வாகும்.

DSC_3514-133x200இதற்காக வல்வெட்டித்துறை ஊரிக்காடு தொடக்கம் ஊறணி வைத்தியசாலை வரை வீதிகளெங்கும் மின்சார தீபங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனிடையை இந்த இடைப்பட்ட இடங்களில் 12 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு இசைக்கச்சேரி, பட்டிமன்றம், குத்தாட்டம், சங்கீதக்கச்சேரி போன்ற வேறுவேறான நிகழ்ச்சிகள் 12 மேடைகளிலும் ஒரே சமயத்தில் இடம்பெற்றன.
இதன்போதே மின்சார தீபங்கள் பொருத்தப்பட்ட வயர் குறித்த நபரின் காலில் சிக்கி அதன்மூலம் பாய்ச்சப்பட்ட மின் ஒழுக்கு காரணமாக அவர் பரிதாபகரமாக உயிரிழக்க வேண்டி ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here