நாம் எதற்காக திலீபனைக் கொண்டாடவேண்டும்?
எதற்காக நாம் திலீபத்தை தினம் தினம் எழுதவேண்டும்?
பதில் சுலபமானது.
திலீபன் உண்ணாநோன்பிற்கு காரணமாக அன்று வைத்த கோரிக்கைகள் இன்றும் அப்படியே பொருந்திப்போகின்றது.
தமிழர்களின் இறையாண்மையினை பேசி,
தமிழர்கள் ஒரு தேசிய இனம் என உரைத்த திலீபனின் உறுதிப்பாட்டை தமிழினம் இன்றுவரை பின்பற்றுகின்றது.
மிக இலகுவாகவும் அனைவருக்கும் புரியும் படியும் புலிகள் வகுத்த தாயக்கோட்பாடுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருப்பது மாவீரர்களின் ஒப்பற்ற தியாகம்.
அதில் திலீபன் முதன்மையானவன்.
எமக்காக, எமக்கொரு தனித்தேசத்தை பெறுவதற்காக,
அணு, அணுவாக தன்னை இழந்தவன் தீலீபன்.
எமக்காக தம்மை இழந்தவர்களை மட்டுமே நான் கடவுள் என்பேன்.
கல்கடவுள்களை தினம் ,தினம் உருண்டு புரண்டு வணங்கிய தமிழ்ச் சமூகத்தின் நிஜக்கடவுள் திலீபன் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
திலீபம் பேரெழுச்சியுடன் தலைமுறைகள் பல தாண்டியும் கொண்டாடப்படவேண்டும்.
திலீபம் தரும் புத்துயிர் விடிவு நோக்கிய தமிழர்களின் பயணத்திற்கான வைட்டமின் மாத்திரைகள் என்றால்,அது மிகையில்லை!–
அன்பரசன் நடராஜா.