கனடாவில் படுகொலை செய்யப்பட்ட யாழ். யுவதி தர்சிகாவின் பெற்றோரின் கதறல்…!

0
643

கனடாவில் தனது கணவனால் பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்ட தர்சிகாவின் பெற்றோரின் கதறல் இது.

எங்கள் மகளை ஒரு முறை கடைசியாக பார்க்க வேண்டும் எங்கள் வீட்டின் விளக்கு அணைத்துவிட்டது குடும்பத்துடன் சந்தோசமாக வாழ வேண்டும் என அனுப்பி வைத்த பெண்ணை ஈவிரக்கமின்றி கொன்றுவிட்டானே என கதறுகின்றனர் தர்சிகாவின் பெற்றோர்

ஏழ்மையான குடும்பம் எளிமையாக வாழும் பெற்றோர் இன்னும் திருமணமாகாத இரண்டு சகோதரிகள் இரண்டு சகோதரர்கள் என ஒரு நடுத்தர குடும்பம்தான் அது
கனடாவுக்கு சென்றால் தன் குடும்பத்தை ஒரு நிலைக்கு கொண்டுவரலாம் என எண்ணி சென்றவள் இன்று பிணமாக வர இருக்கிறாள்

எனது பிள்ளையை இந்நிலைக்கு ஆளாக்கியவன் சிறையில் இருந்து மீண்டு வரக்கூடாது என கதறுகின்றார் தர்சிகாவின் தாய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here