பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு!
சிங்கள குடியேற்றங்களை நிறுத்து!
அரசியல் கைதிகளை விடுதலை செய்!
என்ற கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணம் இடம்பெறவுள்ளது.
நாளை 21.09.2019 சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு வவுனியா பொங்குதமிழ் தூபியிலிருந்து நடைபயணமும், தியாகதீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பயணமும் நடைபெறும்.
அனைவரும் கலந்து கொண்டு இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற திலீபன் அண்ணாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலுச்சேர்க்க வருமாறு ஏற்பாட்டாளர்கள் உரிமையுடன் வேண்டி நிற்கின்றனர்.