தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 32 ஆண்டு நீங்காத நினைவில் பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான ஆர்ஜோந்தே நகரத்தில் திலீபனின் நினைவாக நாட்டப்பட்டுள்ள நினைவுத் தூபியின் முன்பாக திலீபன் பாரததேசத்திற்கு எதிராக ஐந்து அம்சக்கோரிக்கையை வைத்து உண்ணாமறுப்புப் போராட்டத்தை 32 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த நாளான 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை அவரின் நினைவுக்கல்லின் முன்பாக அப்பிரதேசவாழ் மக்களால் ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம், மலர் வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது. தொடர்ந்து திலீபன் இன்னுயிர் ஈந்த 26 ஆம் நாள் வரை 12 நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுடர் வணக்கம் நடைபெறும் இந்த ஈகம் நிறைந்த நினைவுகளில் ஏனைய பிரதேச மக்களும் வந்து கலந்துகொண்டு வணக்கம் செலுத்தி வருகின்றனர். 26 .09.2019 அன்று ஒருநாள் அடையாள கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெறவுள்ளது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -ஊடகப்பிரிவு )