நெதர்லாந்தில் சாலை விபத்தில் சிக்கி தமிழ் இளைஞர்கள் இருவர் பலியானதுடன் மூவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நெதர்லாந்தின் லிம்பர்க் பகுதியில் உள்ள A73 நெடுஞ்சாலையில் கடந்த 13.09.2019 வெள்ளிக்கிழமை இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸ் உரிமம் பெற்ற வான் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பின்னர் கம்பம் ஒன்றில் மோதி நின்றுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி தமிழ் இளைஞர்கள் இருவர் மரணமடைந்ததுடன் மூவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
பிரான்சில் வசித்த மாயன் கணேந்திரன் (வயது 21), விபுலேந்திரன் சுவேஸ்திகன் (வயது 19) ஆகிய இளைஞர்கள் இருவருமே உயிரிழந்தவர்களாவர்.
விபத்து தொடர்பில் தகவல் அறிந்துவந்த பொலிசார் மற்றும் மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தை தொடர்ந்து Beesel மற்றும் Belfeld இடையேயான நெடுஞ்சாலை மொத்தமாக மூடப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மெதுவாக நகர்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.