10வது நாளாக ஐ.நாவை அண்மித்து கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணமானது இன்றையதினம் Solothurn மாநகரசபையில் ஆரம்பித்து Berne மாநகரசபையை ஊடறுத்து மொத்தமாக 950km கடந்து Aarberg மாநகரசபையை வந்தடைந்தது.
பல இன்னல்கள் வந்தபோதும் இயற்கையும் மாவீரர்களும் எங்கள் துணை நின்று இந்த நீதிக்கான மனிதநேய ஈருருளிப்பணத்தை வழிப்படுத்தி செல்ல உறுதுணை நின்றனர்.
Berne மாநகரசபையை அண்மித்தவேளை நாங்கள் Berne வாழ் தமிழ் உறவுகளால் வரவேற்கப்பட்டு காவல்துறையின் பாதுகாப்புடன், அங்கே மக்கள் சந்திப்புடன் கூடிய கவனயீர்ப்பு ஒன்று கூடலும் நடைபெற்றது.
மக்கள் சந்திப்பில் நாம் கடந்து வந்த பாதையில் நடைபெற்ற அரசியல் சந்திப்பு மற்றும் இந்த அறவழிப்போராட்டத்தின் இலக்கு பற்றி மக்களுக்கு தெரிவிக்கிப்பட்டு, Geneva மாநகரில் எதிர்வரும் 16.09.2019 நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு,
அறவழிப்போராட்டத்தின் நோக்கம் அடங்கிய துண்டுப்பிரசுரம் பல்லின வாழ் மக்களுக்கு வழங்கப்பட்டது.
“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”