நேபாளத்தில் இன்று பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகி பதிவாகியுள்ளது. நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நிலநடுக்கத்தால் 6 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து நேபாளத்தில் அவ்வப்போது ஆப்டர்ஷாக் எனப்படும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது.
இதனால் மக்கள் பீதி அடைந்து திறந்தவெளியில் டென்ட்டுகளில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று அதிகாலை மூன்று முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.29 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.5 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் சிந்துபால்சவுக் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தாடிங் மற்றும் கோர்கா மாவட்டங்களில் அதிகாலை 4.25 மற்றும் 5.57 மணிக்கு நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு நில அதிர்வுகளும் ரிக்டர் அளவுகோலில் 4 ஆ பதிவாகியுள்ளது.