நேற்றையதினம் அவுஸ்திரேலியாவில் மர்மமான முறையில் தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
அவுஸ்திரேலியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய குறித்த இளைஞன் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் மூத்த சகோதரரன், அதே பகுதியில் வசித்து வரும் நிலையில் அவரது சடலத்தை அடையாளம் காண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
யாழ்ப்பாணம் – வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான குமார் பகீதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவரை காதலித்து வந்த நிலையில் அந்த யுவதி இளைஞரை ஏமாற்றியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதன் காரணமாக விரக்தி அடைந்த இளைஞன் தாயாருக்கு தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு, வீடியோ அழைப்பு எடுத்து அவர் கண் முன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை பல இளையோர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி சமீபகாலமாக அதிகரித்த வண்ணம் உள்ளமை பலரையும் கவலை கொள்ளசெய்துள்ளது.