நீதிக்கான நடைபயணம் பாரிசிலிருந்து 340 கிலோ மீற்றரில் உள்ள டிசேன் என்ற நகரத்திலிருந்து காலை 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பித்து 14 ஆவது நாளாக சென்று கொண்டிருக்கின்றது. குளிர் புகாருக்கு மத்தியில் நடைபயணம் 34 கிலோ மீற்றரில் உள்ள சன்சீன் ஏ பீச் (Saint -Seine en Bach) நகரை நோக்கிச் செல்கின்றது. இனிவரும் வீதிகள் யாவும் கனரகவாகனப்பாதையும் அல்ப்ஸ் மலைத்தொடர்களை கொண்ட பிரதேசங்களாகும்.
14 ஆவது நாளாக நடைபெறும் நீதிக்கான நடைபயணம் dole என்ற நகரத்தை இன்று மாலை சென்றடைந்தது.வரும் வழியில் இருந்த கிராமத்தின் மாநகரசபையில் போராட்டத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது . குறிப்பாக Mairiede Maillts மாநகரசபை முதல்வர் நேரடியாக மனுவைப் பெற்றுக்கொண்டு தமது கடிதத் தலைப்பில் கையெழுத்திட்டும் தந்திருந்தார். அதனை விட 4 மாகரசபையில் எமது கோரிக்கை மனுக்கள் கையளிக்கப்பட்டது. இன்று உயிர் ஈந்த மாவீரர்களின் நினைவுச் சின்னங்கள் நடைபயணத்திற்கு பெரும் பலமாக இருந்து வந்துள்ளது.
நீதிக்கான நடைபயணத்தில் இணைந்து கொள்ள பிரித்தானியாவிலிருந்து உதயணன் என்ற செயற்பாட்டாளர் நேற்று டிஜோன் மாநகரம் வந்தடைந்தார்.