உதயன் பத்திரிகை நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த அசாதாரண சூழலின் போது சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு கூரப்பட்டனர்.
மேலும் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கான உதவி வழங்கும் திட்டம்,யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ‘உதயன் குழுமத் தலைவருமான’ ஈ.சரவணபவனினால் ,ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்துடன் ஊடக சுதந்திர தின நிகழ்வும் – கண்காட்சியும் யாழ்.பொது நூலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இன்று காலை 10.20 மணிக்கு நிகழ்வுகள், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ‘உதயன் குழுமத் தலைவருமான’ ஈ.சரவணபவனின் தலைமையில் ஆரம்பமானது. முதலில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் – ஊடகப் பணியாளர்களுக்கான ஈகச்சுடரேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.
ஈகச் சுடரினை உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ம.வ.கானமயில்நாதன், யாழ்.தினக்குரல் பத்திரிகையின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.கேசவராஜ், யாழ்.போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,வடக்கு மாகாண சபை உறுப்பினர் த.சித்தார்த்தன், யாழ்.மாவட்ட உதவி அரச அதிபர் சா.சுதர்சன்,யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ.இராசகுமாரன், மற்றும் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பத்தினர் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட உதயன் ஊடகவியலாளர் ரஜிவர்மன் மற்றும் உதயன் அலுவலகச் சாரதி பாஸ்கரன் ஆகியோரின் குடும்பத்தினருக்கும், கேலிச்சித்திர கலைஞர் பயஸின் குடும்பத்தினருக்கும், ‘உதயன் குழுமத் தலைவரும்’, யா
ழ்;. – கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவனினால், நிதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
ழ்;. – கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவனினால், நிதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.