கடந்த வாரம் நீதிக்கான நடைபயணம் ஜெனீவா மனிதவுரிமைகள் செயலகம் நோக்கி 259 கிலோ அளவில் சென்று கொண்டிருக்கையில் நண்பகல் போல் வீதியால் சென்று கொண்டிருக்கையில் பெருதெரு வீதியால் விரைவாக வந்த கார் வாகனம் ஒன்று எமது இடத்திற்கு அண்மையில் விரைவை குறைத்து எமது நடைபயணப்போராளிகளைப் பார்த்து தமது வாகன ஒலியை ( கோர்ன் ) எழுப்பிச் சென்றனர். இது வழமையாக நாம் நடைபயணத்தை மேற்கொண்ட காலத்திலிந்து பெருவீதிகளில் சென்ற போதெல்லாம் பெருவாகனங்கள் முதல் அனைத்து வாகனங்களும் தமது வாழ்த்துக்களையும், உற்சாகத்தையும் இவ்வாறுதான் செய்து கொண்டு சென்றார்கள். சனநாயகத்தை பேணுகின்ற மதிக்கின்ற நாடுகளும், மக்களும் மக்களின் சனநாயகப்போராட்டத்தை எவ்வாறு ஆழமாக பார்க்கின்றார்கள், நேசிக்கின்றார்கள் என்பதை வழியெங்கும் நாம் கண்டோம்.
அன்றைய நாள் மதியம் வெயிலின் கொடுமை தாங்க முடியாது சற்று ஓய்வெடுக்க ஓர் தோட்டத்தின் வீட்டுக்கருகில் நின்றிருந்தோம். சற்று நேரத்தில் எம்மை நோக்கி ஒரு வாகனம் வந்து நிறுத்தப்பட்டது. சில மணித்துளிக்கு முன் நாம் வீதியில் கண்ட அதே வாகனம் தான் அது என்பதை உணர்ந்தோம். அதிலிருந்து ஒரு பெண் மூன்று ஆண்களும் இறங்கினார்கள். வழமைபோல் எங்களுக்குள் இருக்கும் சந்தேகம் என்பது வெளியேறி பலவாறு சிந்திக்க முற்பட்டது. அது தவறல்ல நாம் எமது நோக்கத்திற்காக எவரையும் நோகடிக்காது எமது இனம் நோகக்கூடாது என்பதற்காக எம்மை நோகடித்துச் செல்லும் போது எமது நோக்கம் நிறைவேறும் முன்னர் எதுவும் நடைபெற்றுவிடக்கூடாது என்பதால் எதற்கு தயார்நிலையில் நின்று கொண்டு, இவர்கள் நண்பர்களா? அல்லது விரோதிகளா? என்று சிந்திப்பது மனித இயல்பு தானே. வந்தவர்கள் கைகொடுத்தார்கள் தமிழில் வணக்கம் சொன்னார்கள். பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் உரையாற்றினார்கள். தாம் சிறீலங்காவுக்கு குறிப்பாக யாழ்ப்பாணம் போனவர்கள் என்றும் தங்களுக்கு பாரிசில் தமிழ்க் குடும்பம் நட்பாக இருப்பதாகவும் சொன்னார் எமது கலை பண்பாடு மொழி விருப்பம் என்றும் கூறினார்கள். நாம் செல்லும் நோக்கத்தை அவர்களுக்கு கூறியதோடு எமது துண்டுப்பிரசுரத்தையும் கொடுத்தோம் இலங்கைத்தீவில் இப்பொழுது எல்லாம் நின்றுவிடதே என்றார்கள் அதுவேதான் சர்வதேசத்தில் பலருடைய கணிப்பும் கூட, ஆனால் நாம் சிறீலங்காவில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கு வெளித்தெரியாத தமிழின அழிப்பு, எமது பூர்விக இடம் பறிப்பு, புத்தகோயில் அமைப்பு, காணாமல் போனோரின் போராட்டம் 2 வருடங்கள் எட்டியும் சிங்கள அரசிடம் எந்த பதில் இல்லை என்பதையும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக சொல்லி ஆட்சிபீடமேறிய மைத்திரி அரசு கூட தமிழர்களை மட்டும் ஏமாற்றவில்லை சர்வதேசத்தையே ஏமாற்றிக் கnhண்டிருக்கின்றது என்பதை நாமும் மனந்திறந்து மாறிமாறி கூறினோம் அவர்கள் முகத்தில் கவலையாக மாறிக்கொண்டு போனது. கணவன் துணைவியுடன் அவர்களின் நண்பர்களும் தான் வந்திருந்தனர். வீதியால் செல்லும் போது உங்கள் கொடிதான் எங்களுக்கு நீங்கள் தமிழர்கள் ஏதோ இந்தவழியால் செல்கின்றீர்கள் என்று அடையாளப்படுத்தியது என்றும் அதனால்தான் தாம் மேற்கொண்டு போக முடியாது மீண்டும் திரும்பி எங்களிடம் வந்ததாகவும் கூறினார்கள் வந்த பெண்மணி எமது தேசியக்கொடியை விருப்பத்துடன் வாங்கி கையில் ஏந்தி அதனை தனது துணைவர் மூலம் படமும் பிடித்துக்கொண்டார். போராடுங்கள் உங்கள் நியாயமான போராட்டம் நிச்சயம் வெற்றியும் நாடும் கிடைக்கும் என்றார்கள். நாங்கள் சொன்னோம் வழியெங்கும் இந்த நாட்டின் விடுதலைக்காக தம்மை ஈந்தவர்களுக்காக நீங்கள் நினைவுச் சின்னங்களை இனிவரும் ஒவ்வொரு பிரெஞ்சுத் தலைமுறையும் பார்க்க வேண்டும் என்று கட்டிவைத்திருக்கின்றீர்கள் அது எங்களுக்கு பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுக்கின்றது என்றும், எங்கள் மண்ணில் உயிர்ஈந்த மாவீரர்கள், மக்கள் கல்லறைகளையும், உடல்களையும் கூட சிங்களம் விட்டு வைக்கவில்லை என்று கண்கள் குளமாகக் நாம் கூறினோம். அவர்களுக்கு என்ன பதில் எங்களுக்கு சொல்லவே எதுவும் வரவில்லை. இது அவர்கள் மட்டுமல்ல பல பிரெஞ்சு மக்களுக்கும் தான் .
இப்படிப்பட்டதொரு நிலையில் 1000 வருடங்களின் பின்பும் 500 வருடங்களாக அடிவருடியாய் கிடந்த தமிழனை தலைநிமிர்த்துக்காட்டிய ஈழத்தமிழ் மக்களாகிய எமது பிள்ளைகளின் உறவுகளின் தழிழீழ விடுதலைபோராட்டமும் அதனை உறுதியுடன் உன்னமாக தலைமையேற்றது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் தான் என்பதை எதிரியே இதயபூர்வமாய் ஏற்றுக்கொண்டிருக்கும் இவ் வேளை காக்கை வன்னியன் வழிவந்த பல இனத்துரோகிகள் வரிசையில், நெல்லுக்குள் வளரும் புல்லுப் போல் எம்முடன் கூடவே கோடரிக்காம்புகள் சில வளர்ந்து கொண்டுதான் வருகின்றன. அதிலொருவர்தான் இந்த முத்தையா முரளிதரன் என்பவர். இவர் தனது கோடிக்காணக்கான பணத்தை காப்பாற்றுவதற்காக சிங்கள விசுவாசிகளுக்கு நன்றி விசுவாசம் காட்ட சொன்னதே இந்தக்கதையும் இந்தக் கருத்துமாகும். தனது சகோதர தந்தைவழி மலையகத்தமிழ் மக்களுக்காக இன்றுவரை எதையும் கொடுத்ததில்லை தாரைவார்த்ததும் இல்லை. கிரிக்கற் போட்டிகளில் எத்தனை பிழையான பந்துகளை எறிந்து பரிகசிக்கப்பட்டவர் தற்பொழுது அதேபோலத்தான் வார்த்தைகளாலும் பிழையான கருத்துக்களை எறிய முற்பட்டிருக்கின்றார். அவர் எடுத்த விடயம் சாதாரணமான விடயமல்ல அதன் பலனை அவர்விட்ட வார்த்தையின் வீரியத்தை இனி தமிழர்களால் எப்போதும் அனுபவிப்பார் தாயைப் பழிப்பது போன்றதுதான் தாய்மண்ணை பழிப்பது உண்மைத்தமிழன் அதைச்செய்யமாட்டான் முத்தையா முரளிதரன் யார் ????? – – நாம்-