புதிய அரசாங்கமும் தீர்வை வழங்குவது கேள்விக்குறி ? சரவணபவன் எம்.பி. கவலை!

0
114

00000(7)புதிய அரசு கூட தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து முழுமையாக அதற்குரிய தீர்வுகளை வழங்குமா என்பது கேள்விக்குறியாகவேயுள்ளது என்று யாழ் – கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார்.

100 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் தமிழ் மக்க ளுக்குரிய பல வேலைகளை இன்னமும் புதிய அரசு செய்யவில்லை. குறிப்பாக சிறையிலுள்ள தமிழ் கைதிகளை விடுவித்திருக்கலாம், காணாமல் போனவர்கள் தொடர்பாக அவர்களது உறவினர்களுக்கு ஏதாவது ஒரு வழியை காட்டியிருக்கலாம். வலி. வடக்கு மக்களை அவர்களது சொந்த நிலங்களில் மீள குடியமர்த்தியிருக் கலாம் இது போன்ற பல வேலைத் திட்டங்களை செய்திருக் கலாம்.

சம்பூரை இன்னமும் விடவில்லை. கேட்டால் உரிய அதிகாரிகள் அனுமதி தரவில்லை என்கிறார்கள். நான் கேட்கிறேன் அந்நிலத்தை யாருடைய சம்மதத்துடன் எடுத்தீர்கள்? அவர்களிற்கு மனமிருந்தால் இடமிருந்திருக்கும்.

பெரும்பான்மை இன அரசு நாம் கேட்டவற்றை எல்லாம் செய்து விடும் என கூறமுடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here