ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

0
299

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகின்றது

சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறுகின்ற கூட்டத்தொடரில் இலங்கையைச் சேர்ந்த சில தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ள அதேவேளை புலம்பெயர் ஈழத்தமிழர்களின் சார்பிலும் பலர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி அலுவலகத்தின் பிரதிநிதிகள் சிலர் கலந்துக் கொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

எனவே புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் இம்முறை ஒன்றிணைந்து எதிர்வரும் 16.09.2019 திங்கட்கிழமை ஜெனிவாவில் குரல் எழுப்ப வேண்டும் எனக்கேட்கப்படுள்ளது.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அறிக்கை ஒன்றும் இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here