முல்லைத்தீவு, மல்லாவி பகுதியில் உழவு இயந்திரமொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.
மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று,பாலி ஆற்றில் மணல் ஏற்றிக்கொண்டு திரும்பிச்செல்ல முற்பட்ட வேளையில் குறித்த உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
நேற்று (05) நண்பகல் பாலி ஆற்றில் மணல் ஏற்றுவதற்காக உழவு இயந்திரத்துடன் சென்று, ஆற்றில் மணல் ஏற்றிக்கொண்டு உழவு இயந்திரத்தை ஆற்றில் இருந்து மேலே செலுத்த முற்பட்ட வேளையில் உழவு இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்துள்ளது.
இதில் உழவு இயந்திரச் சாரதியான மூன்றாம் திட்டம், கல்விளான் , துணுக்காயை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து சுரேஷ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.