முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொதுஜன பெரமுனவின் நேரடி செயற்பாட்டாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறிகண்டி யாழ். பல்கலைக்கழக வளாகச் சந்தி அருகில் இன்று (புதன்கிழமை) மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பொதுஜன பெரமுனவினதும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் நேரடி செயற்பாட்டாளரான தீபன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
தீபன் செலுத்திச் சென்ற கார் பேருந்து ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.