சர்வதேச தொழிலாளர் தினத்தில் உலகெங்கும் வாழும் தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து ஒடுக்கப்படும் தேசிய இனமான ஈழத் தமிழினமும் மே தினத்தை எழுச்சியுடன் கொண்டாடியது.
சுவிஸ் நாட்டின் வர்த்தகத் தலைநகரான சூரிச் மாநகரில் காலை 10:30 மணியளவில் ஊர்வலம் ஆரம்பமானது. சுமார் 10 ஆயிரம் வரையான சுவிஸ் நாட்டவரும் ஏனைய இனத்தவரும் கலந்து கொண்டனர் மழை தொடர்ந்து தூறிக்கொண்டே இருந்தது அத்தோடு விசித்திரமான குளிர்ந்த காற்றும் வீசியதால் பேரணிகளில் கலந்துகொண்டவர்கள் மிகுந்த அசசெளகரியங்களை எதிர்நோக்கினர் .மழைக் கவசங்களும் குடை பிடித்த்வர்களுமாக பெரும்பாலானோர் காணப்பட்டனர் . ஊர்வலம் Helvetiaplatz இல் இருந்துஆரம்பித்து வெல்வி வாவிக்கரையில் உள்ள மைதானத்தை அடைந்ததும் பொதுக் கூட்டம் இடம் பெற்றது.
“தமிழீழ தேசியக்கொடியையும் தமிழீழ தேசியத்தலைவரின் படங்களையும் தாங்கியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்”