முல்லைத்தீவு மாவட்ட
காணாமல் ஆக்கப்பட்டோ
ருக்கான சங்கத் தலைவிக்கு
எதிராகப் பொலிஸ் தலை
மையகத்தில் முறைப்பாடு
செய்துள்ளார் எனக் கூறி,
உறவுகளைத் தேடி வரும்
எமக்கு அச்சுறுத்தல் விடுத்
துள்ளார் டக்ளஸ் தேவா
னந்தா.
அவர் அதிகாரத்தில்
இருந்தபோது என்னென்ன
செய்தார் என்று அவரது
மனச்சாட்சிக்குத் தெரியும்
என வடக்கு-கிழக்கு காணா
மல் ஆக்கப்பட்டோருக்கான
சங்கத் தலைவி கலாரஞ்சினி தெரிவித்
தார்.
யாழ்.ஊடக மையத்தில் நேற்று முன்
தினம் நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்
தேவானந்தா அதிகாரத்தில் இருந்த
போது பல இளைஞர்களைக் கடத்திப்
படுகொலை செய்தார் என முல்லைத்தீவு
மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்
கான சங்கத் தலைவி அண்மையில்
ஊடகவிலாளர் மாநாட்டில் தெரிவித்தி
ருந்தார். அது ஊடகங்களில் வெளி
யான தையடுத்து நாடாளுமன்ற உறுப்
பினர் டக்ளஸ் தேவானந்தா தாம் இந்
த ப் பெ ண் ம ணி மீ து கொழு ம் பு
பொலிஸ் தலைமையகத்தில் முறைப்
பாடு ஒன்றைப் பதிவுசெய்துள்ளார் என
வும் அதில் தாம் கடத்தியமைக்கான
ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பிக்கு
மாறும் கோரியுள்ளார் எனவும் ஊடகங்
கள் வாயிலாகத் தெரிவித்திருந்தார்.
இவரது செயற்பாடு கடந்த காலங்
களில் எவ்வாறு இருந்தது என்று
அவருக்கு நன்றாகவே தெரியும். அதே
போன்று மக்களும் நன்றாக அறிவார்
கள். காணாமற்போன உறவுகளைத்
தேடிவரும் எம்மைப் போன்ற குடும்பத்தி
னர் மீது அதிகாரங்களைத் திணித்து
எமது போராட்டங்களை மழுங்கடிக்க
முயற்சிக்கின்றார். பொலிஸில் முறை
யிட்டுள்ளேன் என்பதன் ஊடாக டக்ளஸ்
தேவானந்தா எமக்கு அச்சுறுத் தல்
விடுத்துள்ளார். தமிழ் இனத்தைச் சேர்ந்
தவராக இருந்துகொண்டு எமது கண்
ணீரில் வேடிக்கை பார்க்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த
பெண் அமைச்சரான விஜயகலா மகேஸ்
வரன் தனது கணவரைக் கொன்றவர்
இந்தப் நாடாளுமன்றத்திலேயே இருக்
கின்றார், அவர் பல கொலைகளுடன்
சம்பந்தப்பட்டும் உள்ளார் எனப் பகிரங்
கமாக அவருடன் வாதாட்டம் செய்துள்
ளார்.
அதற்கு முழுமையாகப் பதிலளிக்
காத நாடாளுமன்ற உறுப்பினர் எம்மிடம்
ஆதாரங்களைக் கேட்கின்றார். அவர்
பொலிஸார் ஊடாக விடுத்துள்ள சவாலை
எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கின்
றோம் ஏட்டிக்குப் போட்டியாக நாம் கருத்
துக்களை வெளியிடுவதற்கு அரசியல்
வாதிகள் அல்லர். நாம் உறவுகளை
தொலைத்த நிலையில் நீண்டகாலமாக
தேடிப் போராடி வருகின்றோம் இன்று
வரை எமக்கான நீதி கிடைக்கவில்லை.
இந்நிலையில் வடக்கு-கிழக்கு
மாகாணங்களில் மூன்று வருடங்களாக
வீதிகளில் போராடி வருகின்றோம். எமது
போராட்டத்துக்கு எங்கள் தமிழ்த் தலை
மைகளும் நீதியை இன்றுவரை பெற்
றுத்தரவில்லை. நாட்டில் ஆட்சி மாற்றம்
ஏற்பட்டபோதும் எமது பிரச்சினைக்கு
தீர்வு கிடைக்கவில்லை-என்றார்.