வவுனியாவில் குழு மோதல்களில் ஐவர் மருத்துவ மனையில்!

0
475

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இடம்
பெற்ற மோதல்கள் மற்றும் கைகலப்புகளில் காயமடைந்த பெண் உட்பட 5 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் மாலை 6 மணி தொடக்கம்
இரவு 9 மணி வரை இந்த மோதல் சம்பவங்கள்
இடம்பெற்றுள்ளன எனப் பொலிஸாரிடம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
வவுனியா கூமாங்குளம், நெளுக்குளம், தோணிக்கல், ஈரப்பெரியகுளம், மெனிக்பாம் ஆகிய பகுதிகளில் உள்ள சில குழுக்கள் மற்றும் சில நபர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே பெண்
உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.
தோணிக்கல் பகுதியில், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவர் தனது காணியில் குடியேற நடவடிக்கைகள் மேற்கொண்டபோது அருகில் வசித்தவர்களினால் காணிப் பிரச்சினை தொடரபில் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் வவுனியா,
செட்டிகுளம், ஈரப்பெரியகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்
துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here