மன்னார் முருங்கன் பகுதியில் மின் கம்பத்துடன் மோதி உந்துருளியில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (23) வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம் பெற்றது.
அளவக்கை புதுக்குடியிருப்பை சேர்ந்த இராச துரை பிரசாந்(வயது 24) , கணேஸ் தயாளன்(வயது19) ஆகிய இரண்டு இளைஞர்களே விபத்தில் பலியாகியுள்ளார்கள்.
அளவக்கையில் இருந்து முருங்கன் நோக்கி சென்ற போது அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டினை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்தில் பலியாகினர்.
உடனடியாக அருகில் உள்ள முருங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு உடல்களும் உடல் கூறு பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து நடைபெற்ற இடமானது சிறிய வளைவு வீதியோரத்தில் பற்றைகள் நிறைந்திருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை சில வருடங்களுக்கு முன் இதே இடத்தில் விபத்தின் மூலம் ஒருவர் பலியாகழனார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.