அரபு நாடுகளில் பணிபுரிந்து வந்த இலங்கை பணிப்பெண்களில் ஒருதொகுதியினர் இன்று காலை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
கத்தார் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்நத 60 பணிப்பெண்கள் இன்று காலை 06.40 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
குறித்த பெண்கள் பணிக்காக சென்ற வீடுகளில் சரியாக சம்பளம் வழங்கப்படாமையினால் குறித்த வீடுகளில் இருந்து வெளியேறி கத்தார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தனர்.
இந்நிலையில் இவ்வாறு தஞ்சம் புகுந்தவர்களில் ஒரு தொகுதியினரே இன்று காலை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இதையடுத்து குறித்த தூதரகத்தில் இலங்கைக்கு வருவதற்காக இன்னும் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.