கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சட்டவிரோத தங்க ஆபரணங்களுடன் நபர் ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அத்தோடு குறித்த நபரிடம் இருந்து 21 மில்லியன் ரூபா பெறுமதியான 369 கிராம் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு சட்டவிரோத தங்க ஆபாராணங்களுடன் கைது செய்யப்பட்ட நபர் 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் இந்தியாவில் இருந்து கொழும்பிற்கு சட்டவிரோதமாக தங்க ஆபரணங்களை கடத்த முற்பட்டபோதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.