பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறை 5 ஆவது தடவையாக நடாத்தும் லெப்.கேணல் பொன்னம்மான் அவர்களின் நினைவு சுமந்த ஐரோப்பியா தழுவிய துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி கடந்த (18.08.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கிறித்தை பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக லெப்.கேணல் பொன்னம்மான் அவர்களின் திரு உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 26.12.2007 அன்று நெடுந்தீவுக்கடலில் இடம்பெற்ற மோதலில் சாவடைந்த கடற்கரும்புலி மேஜர் ஈழவீரனின் சகோதரன் அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் சமநேரத்தில் மூன்று மைதானங்களில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றிருந்தன. 18 அணிகள் பங்குபற்றிய இப்போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள் மற்றும் வீரர்களின் விவரம் வருமாறு,
- கால் இறுதி ஆட்ட நாயகன் தயா (எழிச்சி ஏ அணி)
- கால் இறுதி ஆட்ட நாயகன் யது (பி.எஸ்.கே. அணி)
- கால் இறுதி ஆட்ட நாயகன் நிதன் (யாழ்ட்டன் அணி)
- கால் இறுதி ஆட்ட நாயகன் ரமணன் (இணுவில் நீலம் அணி)
- அரை இறுதி ஆட்ட நாயகன் ஜெகன் (எழிச்சி ஏ அணி)
- அரை இறுதி ஆட்ட நாயகன் காண்டி (யாழ்ட்டன் அணி)
- 3 ஆம் இட ஆட்ட நாயகன் சாரு (இணுவில் நீலம் அணி)
- சிறந்த பந்து வீச்சாளர் சாரு (இணுவில் நீலம் அணி)
- சிறந்த துடுப்பாட்ட வீரர் நிதன் (யாழ்ட்டன் அணி)
- சிறந்த களத் தடுப்பாளர் ராகுலன் (யாழ்ட்டன் அணி)
- சிறந்த சகலதுறை ஆட்ட வீரர் அனுசியந்தன் (எழிச்சி ஏ அணி)
- இறுதி ஆட்ட நாயகன் அனு சயந்தன் (எழிச்சி ஏ அணி)
- 1 ஆம் இடம் (எழிச்சி ஏ அணி)
- 2 ஆம் இடம் (யாழ்டன் அணி)
- 3 ஆம் இடம் (இணுவில் நீலம் அணி) வெற்றி பெற்ற அணிகளுக்கும் வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணங்களும் பதக்கங்களும் வழங்கிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது. (பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)