
கடந்த 28.07.2019அன்று நள்ளிரவு மதவாச்சியில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் ஒரேகுடும்பத்தில் மூன்று உயிர்கள் பலியான நிலையில் உயிரிழந்த சுகந்தியின் தாயாரான யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு, விநாயகர் வீதியை சேர்ந்த
திருமதி கார்த்திகேசு மனோன்மணி அவர்களும் கடந்த 08.08.2019 அன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்நிலையில் விபத்தில் பலியான ஜேர்மனியில் இருந்து சென்ற 12 வயது சிறுவன் செல்வன் ஸ்மிநாத் செல்வரஞ்சனின் தாயாரான செல்வரஞ்சன் சத்தியா அவர்களும் சிகிச்சை பலனின்றி இன்று கொழும்பில் உயிரிழந்தார்.
உயிரிழந்த செல்வன் ஸ்மிநாத் அவர்களின் இறுதி நிகழ்வு ஜேர்மனியில் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவிருந்த நிலையிலேயே தாயாரும் உயிரிழந்துள்ளார்.
