நியூஸிலாந்தில் மனித உயரம் கொண்ட பென்குயினின் வன்கூடு!

0
514

மனிதரைப் போன்ற உயரம் கொண்ட பென்குயின் பறவையின் எலும்புக்கூடு நியூஸிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பழங்கால உயிரினங்களின் புதைபடிமங்களை சேகரிக்கும் தன்னார்வலர் ஒருவர் அண்மையில் பென்குயின் பறவையின் கால் எலும்புப் படிமங்களைக் கண்டறிந்தார்.

அந்தப் படிமங்களை ஆய்வு செய்ததில், அவை பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்து போன, இதுவரை அறியப்படாத பென்குயின் இனத்தைச் சேர்ந்தவை என்பது தெரிய வந்தது.

அந்த இனம் அழிந்து 5.6 கோடி ஆண்டுகளிலிருந்து 6.6 கோடி ஆண்டுகள் வரை ஆகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அவற்றின் உயரம் 1.6 மீட்டராகவும் (5.25 அடி), எடை 80 கிலோவாகவும் இருந்திருக்கும் என்று ஆய்வில் தெரிய வந்தது. இது, ஏறத்தாழ சராசரி மனிதனின் எடை மற்றும் உயரம் ஆகும்.

அந்தப் பறவையின் எடை, தற்கால பென்குயின்களைப் போல 4 மடங்காகவும், உயரம் 1.3 அடி அதிகமாகவும் இருந்துள்ளது. கடல் நாய் (சீல்), சுறாக்கள் போன்ற வேட்டை மிருகங்களின் வருகையால் அவை அழிந்திருக்கலாம்.

பிரம்மாண்ட பென்குயின்கள் வாழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே ஊகித்திருந்ததை இந்த கண்டுபிடிப்பு மெய்ப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here