சிறிலங்கா இராணுவக் கப்பல் மோதியதில் மீனவப் படகு சேதம்!

0
207

யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மீண்டும் கரைக்கு திரும்பிய மீனவர்களது படகின் மீது இராணுவத்தினரின் கப்பல் மோதியதில் குறித்த படகு பலத்த சேதமடைந்துள்ளது. 

யாழ் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியிலிருந்து நேற்று 12.08.2019 மீன்பிடித் தொழிக்குச் சென்று கரை திரும்பிக் கொண்டிருந்த போது கடற் கரையிலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் வழி மறித்த கடற்படையினர் தமக்கு மீன் தருமாறு கேட்டுள்ள நிலையில் மீனை கொடுத்து விட்டு கரைக்கு வர இயந்திரத்தை இயக்கி முற்பட்ட வேளை கடற்படையினர் குறித்த படகு மீதி மோதி தள்ளியதாகவும் இதனால்   கணபதிப்பிள்ளை சிவச்சந்திரன் (மயூரன்) என்பவரது படகு பலத்த சேதமடைந்துள்ளது. 

குறித்த படகில் பறவைத் வலை  தொழிலுக்காக  ஜெயபாலு ஜெயநேசன்,செளந்தராசா செல்வக்குமார்  ஆகிய இருவரும்  கரைக்கு திரும்பி வரும்போது  இரவு 10.50 மணியளவிலேயே இச் சம்வம் நிகழ்நதுள்ளது.

 தமது படகு கடலில் மூழ்குவதாகவும் சத்தமிட்டு தம்மைகாப்பாற்றுமாறும் கத்தியும் கடற்படை தம்மை   அப்படியே விட்டிட்டுசென்றுவிட்டதாகவும்  தாம் உடனடியாக கரையிலுள்ள நண்பர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது படகுகளை வரவளைத்தே தமது படகை கட்டி இழுத்து கரைக்கு கொண்டுவந்தாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் மற்றும் பளை போலிஸ் ஆகியோரிடம் முறையிட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

அச்சம் காரணமாக குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்க பாதிக்கப்பட்டவர்கள் மறுத்துள்ளனர்.குறித்த படகு கொள்வனவு செய்யப்பட்டு நேற்று நான்காவது தடவையாக கடலுக்கு பயன்படுத்தபட்டமையும் அதன் பெறுமதி சுமார் இரண்டு இலட்சம் என்பதும் குறிப்பிட தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here