ஏ 9 சாலை புனரமைப்பின் போது மண்ணுக்குள் புதைந்திருந்த அஞ்சல் பெட்டி மீளத் தோண்டி எடுக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் சந்தியில் அஞ்சல் திணைக்களத்தினால் வைக்கப்பட்டிருந்த சீமேந்து கலவையினால் உருவாக்கப்பட்ட அஞ்சல் பெட்டி புதையுண்டிருந்தது.
சாவகச்சேரி அஞ்சல் அதிபர் லம்பேர்ட் இன்பராஜ் புதையுண்டு நிலையில் காணப்பட்ட அஞ்சல் பெட்டியினை மீட்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
கனரக வாகனம் மூலம் புதையுண்டு காணப்பட்ட அஞ்சல் பெட்டியினை மீட்டெடுத்து, புனரமைத்து, கொழும்பிலிருந்து தொழில்நுட்ப உத்தியோகத்த்ர்களை வரவழைத்து அஞ்சல் பெட்டியில் பழுதடைந்து காணப்பட்ட பூட்டைத் திருத்திய பின்னர் மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.