ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
ஆழிக்குமரன் ஆனந்தன் என்று அழைக்கப்படும் விவேகானந்தன் செல்வக்குமார் ஆனந்தன் 1943 ஆம் ஆண்டு பிறந்தார்
இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட ஆனந்தன் மெது நடை , நடனம் போன்ற பல செயற்பாடுகளில் சாதனை படைத்தார்.
தொடர்ந்தும் தனது முயற்சியைக் கைவிடாத ஆனந்தன், 1975 ஆம் ஆண்டு மன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்திச்சென்று பின்னர் அங்கிருந்து மீண்டும் மன்னாருக்கு நீந்தித் திரும்பினார்.
ஆழிக்குமரன் ஆனந்தன் பாக்கு நீரிணையைக் கடந்ததன் மூலம் உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்.