இரணைமடுக்குளத்தைப் பார்வையிடுவதற்கு தொடர்ந்தும் தடை!

0
295

இரணைமடுக்குளத்தை பார்வையிடுவதற்காக வருகை தரும் பொதுமக்களுக்கு குளத்தின் அணைக்கட்டு வரை சென்று பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நடைமுறையில்  உள்ளது என, பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் தென்னிலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருந்து வருகை தரும் பொதுமக்கள் குளத்தினை முழுமையாக பார்வையிட முடியாமல், வெளிப்புறமாக நின்று பார்வையிட்டு விட்டுச் செல்கின்றனர்.

இரணைமடுக்குளம் புனரமைக்கப்பட்ட பின்னர் பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்த போதும்,  கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடை இன்று வரை தொடர்ந்தும் நடைமுறையில் காணப்பட்டு வருகிறது, என பொதுமக்கள் தெரிவித்தனர்.

எனவே, இது தொடர்பில் கிளிநொச்சி இரணைமடுக்குள நீர்ப்பாசன பொறியியலாளர் பரணிதரனை தொடர்பு கொண்டு வினவியபோது, நாட்டில் ஏனைய குளங்களுக்கு நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் போன்றே இரணைமடுக்குளத்திற்கும் பின்பற்றுகின்றோம், குளத்தை பார்வையிட வருகின்றவர்கள் திணைக்களத்தின்  அனுமதியை பெற்றே பார்வையிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here