மதவாச்சி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் தாயாரும் உயிரிழந்தார்!

0
446

கடந்த 28.07.2019அன்று நள்ளிரவு மதவாச்சியில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்து ஒருகுடும்பத்தையே சிதைத்துவிட்டது.என்ன நடந்தது??யாருக்கு யார் ஆறுதல் கூறுவது!!!!
என்ற நிலை எங்கும் அழுகுரல்கள்!!!கதறல்கள்!!!!இறைவா ஏன் இப்படி????

மூன்று உயிர்கள் பலியான நிலையில் உயிரிழந்த சுகந்தியின் தாயாரான யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு, விநாயகர் வீதியை சேர்ந்த
திருமதி கார்த்தியேசு மனோன்மணி அவர்களும் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

சிரித்த முகங்கள் சிறகிழந்து போயின ?

எம்மால் முடியாது இவர்களை நாம் எழுதுவதற்குள்
கண்ணால் வடிவதை கை துடைக்க முடியாது !
இன்று எதிர்பாராமல் இடி விழுந்தது நெஞ்சில்
நேற்று சிரித்த முகங்கள் இன்று பேச்சிழந்து போயின ?

நாலு பரம்பரை கண்முன்னே போகுதே !
ஏழு ஜென்மத்திலும் மறக்க முடியுமோ ?
பாலகனும் பாட்டியும் பாடையில் போகையில்
பார்த்திருக்க நாமென்ன மிருகங்களோ ?

இறைவா காலனை கொஞ்சம் கண்டித்து விடு !
பறை அடியில் பதறுகிறது நெஞ்சம்
எங்கள் பெருவீட்டின் ராஜா பறவைகள்
சிறகிழந்து போயின இனி திரும்பி வராது !

பிள்ளையாரை தொழுதீர் சங்கம் வளர்த்தீர்
அன்ன்பொடு சமூகம் வளர்த்தீர் இருந்தும்
பிஞ்சுடன் பூக்களையும் பறித்த இறைவா
ஆத்ம சந்திக்காக உம்மையே வேண்டுகின்றோம் !

ஓம் சாந்தி, சாந்தி , சாந்தி

நல்லூர் வடக்கு சனசமூக நிலையமும் ,சந்திரசேகர பிள்ளையார் கோவிலடி சமூகமும்.

ஊரவர்களின் முகநூல் பதிவு இது!

இறைவா!!! எங்குமே இப்படி ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது…..

மீளாத்துயரில் இணைகின்றோம்.

எங்கள் ஊரின் பண்புமிக்க குடும்பத்தைசேர்ந்தவர்கள் இவர்கள்.குடும்பம் என்றால் இப்படித்தான் வாழனும் என்று வாழ்ந்தவர்கள்..ஒற்றுமையானவர்கள்.ஈஸ்வரனும் பார்வதியும் போல் சதாசிவம் அண்ணரும் சுகி அக்காவும்.மிகச்சிறந்த சிவபக்தர்கள்.அவர்களது பிள்ளைகள் அனைவருமே அருமையான நற்பண்பான பிள்ளைகள்…

ஐந்து பெண் பிள்ளைகளை பெற்றெடுத்து நற்பண்புடனே வளர்த்து அறிவூட்டி பெரியவர்களாக்கி வாழ்வளித்த சுகி அக்காவின் இழப்பினை ஏற்க முடியவில்லை……
இரண்டு பாலகிகளின் தாயவள் அன்புக்கணவரையும் பிள்ளைகளையும் தவிக்கவிட்டுச்சென்ற நிலையில் அக்கணவன் ஊர் உறவுகளை கண்டு கதறியழுத சோகம் சொல்ல வார்த்தைகள் இல்லை!!!!
ஊரில் அம்மம்மா வீட்டிற்கு செல்லும் எண்ணத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஏதுமறியா சிறுவன் ஜேர்மன் நாட்டில் இருந்து வந்து எம்மண்ணில் மீளாத்தூக்கம் கொண்டதும் ஏனோ!!!!!
இறைவா!! இறைவா!!! எங்குமே இப்படி ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது…..

எம்மையெல்லாம் விட்டுப்பிரிந்த எம்ஊர் உறவுகளின் பிரிவுத்துயரில் அவர்கள் தம் குடும்பத்தினருடன் நாமும் இணைந்து கொள்வதோடு,அவர்களது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் நித்திய சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!


கார்த்திகேசு மனோன்மணி

நல்லூர் வடக்கை பிறப்பிடமாகவும் நல்லூர் சட்டநாதர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு மணோன்மனி (மணிஅக்கா) அவர்கள் இன்று (08/08/2019) காலமானார்.
அன்னார் ஆறுமுகம் கார்த்திகேசு அவர்களின் அருமைத்துணைவியும் சண்முகதாஸன்(முகுந்தன்) (செயலாளர் – கரைச்சி பிரதேச சபை ), அமரர் சதாசிவம் சுகந்தி, குமாரதாசன் ( முன்னாள் செய்தி ஆசிரியர் “உதயன்” பிரான்ஸ்) சுமதி(டென்மார்க்), சுபாகினி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர். காலஞ்சென்ற கோபிகா (கிளி/நாசிக்குடா அ.மு.க. பாடசாலை) மற்றும் துளசிகா, நிவேதா (கனடா), சிவப்ரியா(உயர்தரம் – யாழ். இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் அருமை பேர்த்தியுமாவார். சுவாமிநாதன் செல்வரஞ்சன் (ஜெர்மனி) அஜந்தன்(விற்பனைப்பிரதிநிதி- வனிக்கா மெடிக்கல்ஸ்), செல்வராசா வசந்தகுமாரன் (கமநல சேவைகள் நிலையம் சண்டிலிப்பாய் ), ஜெகசோதி சித்தாபன் (கனடா) ஆகியோரின் பேர்த்தியுமாவார். காலஞ்சென்ற சிமிநாத் மற்றும் கபிர்நாத், அக்ஷசயா, வைஷாலி, அகரன், அதிசயா, ஆரவ் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார். . சதாசிவம் கந்தையா, சின்னத்துரை தபீந்திரலிங்கம்(டென்மார்க்) முத்துவேலு ஜெயச்சந்திரன் (டென்மார்க்), கிரிசாந்தினி, வாசுகி ஆகியோரின் மாமியாரும் ஆவர்.
இறுதிக்கிரிகைகள் வெள்ளிக்கிழமை (09/08/2019)பி.ப 4 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

என குடும்பத்தினர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here