திருகோணமலையிலிருந்து மான்களை இறைச்சிக்காக கடத்திச்சென்ற இரு கந்தளாய் முஸ்லிம்நபர்கள் பொலிசாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை நகரின் விசேடமே மான்கள் வீதிகள், மக்கள் நடமாடும் இடமெல்லாம் உலாவித் திரிவதுதான். ஆனால், தற்போது மான்கள் பொலித்தீன் பாவனையால் இறப்பதும் சில வெளி இடங்களை சேர்ந்த நபர்கள் மான்களைக் கடத்திச்செல்வதும், இதனால் மான்களின் இனம் அருகி வருகின்றது. .நேற்று (06/08/2019) மான்களை இறைச்சிக்காக கடத்தி கந்தளாய் நோக்கி சென்று கொண்டிருந்த முஸ்லிம் நபரின் வாகனமொன்றில் இரு மான்கள் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.