வவுனியா, செட்டிகுளம் கல்லாறு அருவித்தோட்டம் சந்தியில் நேற்று இரவு நடந்த உந்துருளி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மெனிக்பாமைச் சேர்ந்த சு.தனுஜன் (வயது 19) என்ற இளைஞரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இரவு 7.30 மணியளவில் நடந்துள்ளது. வவுனியா, செட்டிக்குளத்தில் இருந்து மெனிக்பாம் நோக்கிச் சென்ற இரு உந்துருளிகள் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்டபோதே ஒன்றுடன் ஒன்று உரசி இந்த விபத்து நடந்தது என்று கூறப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் செட்டிக்குளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.