யாழில் வழிப்பறிக் கொள்ளைகள் அதிகரிப்பு!

0
115

யாழ்ப்­பா­ணம் – வழுக்­கை­யாற்­றுப் பகு­தி­யில் வழிப்­ப­றிக்­கொள்­ளை­யர்­க­ளின் அட்­ட­கா­சம் அதி­க­ரித்­துள்­ளது என குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது. அந்த வீதி­யில் நிலை­கொண்­டி­ருக்­கும் கொள்­ளை­யர்­கள் வீதியில் செல்­ப­வர்­களை வழி­ம­றித்து, பணம், நகை­க­ளைப் பறிக்க முற்­ப­டு­கின்­ற­னர். நேற்­று­முன்­தி­னம் காலை தனி­மை­யில் சென்ற பெண்­ணொ­ரு­வ­ரின் தங்­கச் சங்­கிலி, தாலிக்­கொடி என்­பன அறுத்­துச் செல்­லப்­பட்­டுள்­ளன.

யாழ்ப்­பா­ணம், ஆனைக்­கோட்­டைச் சந்­தி­யிலிருந்து வட்­டுக்­கோட்­டைச் சந்­தி­வரை செல்­லும் வீதி­யில் உள்ள வழுக்­கை­யாற்­றுப் பகு­தி­யில் இவ்வாறு தொடர்ச்­சி­யாக வழிப்­ப­றிக்­கொள்­ளை­கள் இடம்பெறுகின்­றன என்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பில் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் மானிப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பா­டு­க­ளைப் பதிவு செய்­த­போ­தும், இழந்த நகை­க­ளையோ, பணத்­தையோ? பொலி­ஸார் மீட்­டுக்­கொ­டுக்­க­வில்லை என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது. அத்­து­டன் குறித்த வீதி­யில் கொள்­ளை­யர்­கள் உலா­வு­கின்­ற­னர். மக்­கள் அந்த வீதி­யால் செல்­வ­தற்கு அஞ்­சு­கின்­ற­னர் என்று தெரி­விக்­கப்­ப­டும்­போது, அந்த வீதி­யில் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­க­ளி­லோ, அல்­லது மக்­க­ளுக்­கான பாது­காப்­பி­லோ பொலி­ஸார் ஈடு­ப­டா­தது மக்­கள் மத்­தி­யில் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

கொள்ளையர்கள் நேற்­று­முன்­தி­னம் வட்டுக்­கோட்­டைப் பகு­தி­யில் இருந்து யாழ்ப்­பா­ணம் நோக்கி உந்துரு­ளி­யில் பய­ணித்த பெண்ணை துரத்­திச் சென்று அவர் அணிந்­தி­ருந்த தாலிக்­கொடி மற்­றும் சங்­கி­லியை அறுத்­துள்­ள­னர். இத­னால் அந்­தப் பெண்­ணின் கழுத்­துப் பகுதி காயங்­க­ளுக்கு உள்­ளா­னது என்று சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்­கள் தெரி­வித்­த­னர்.

வழிப்­ப­றிக்­கொள்­ளை­யில் ஈடு­ப­டு­ப­வர்­கள் மேலங்கி, கையுறை, முகத்தை மூடிய தலைக்­க­வ­சம் என்­பவற்றை அணிந்­தி­ருந்­தி­ருந்­த­னர். அந்த வீதி­யால் அங்­கும் இங்­கும் செல்­கின்­ற­னர். தனி­மை­யில், உத­வி­யின்றி வரு­ப­வர்­களை அவ­தா­னித்து அவர்­கள் தங்­க­ளு­டைய கைவ­ரி­சைக் காட்ட முற்­ப­டு­கின்­ற­னர். இத­னால் நவாலி வீதி­யால் பய­ணிப்­ப­தற்கு அச்­சம் ஏற்­ப­டு­கி­றது. நவாலி வீதி­யில் இடம்­பெ­றும் இந்­தச் சம்­ப­வங்­க­ளைத் தடுத்து நிறுத்த நட­வ­டிக்கை எடுக்­காதுவிடின் காலப்­போக்­கில் உயி­ரா­பத்­துக்­க­ளும் ஏற்­ப­டக்­கூ­டும் – என்று மக்­கள் மேலும் தெரி­வித்­த­னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here