சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்கக் கோரும் தீர்மானத்தை தமிழக முதல்வர் முன்மொழிந்து உரையாற்றினார்.
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டதுதான்.
தமிழக மீனவர்கள் எவ்வித இன்னலும் இல்லாமல் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேற்கொள்ள ஏதுவாக கச்சத்தீவைத் திரும்பப் பெற வேண்டும்.
பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை இலங்கை அரசு தடுக்காமல் இருப்பதற்கும், தேவையான அனைத்து நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
இந்தத் தீர்மானத்தை சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று முதல்வர் முன்மொழிந்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர்களான பலர் ஆதரித்துப் பேசினர். இதனையடுத்து குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை, இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களையும் மீட்டெடுக்க உதவிய தமிழக அரசுக்கும், பிரதமர் நரேந்திரமோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.