மட்டக்களப்பின் பிரபல இந்து ஆலய தீர்த்தோற்சவத்தில் இப்படி அலை போல திரண்ட பக்த கூட்டத்திலே கண்ட அவலமே இது.
பணத்தின்மீது ஆசைவந்துவிட்டால் நிரந்தரமாக யாசகம் பெறுவதற்குவழிவகுக்கும்,
இல்லாததால் தான் கை நீட்டுகின்றனர் என்று சிலர் கூறுவது சரிதான். ஆனால் அதற்காக சிறு பிள்ளைகளை வைத்து அவர்களின் எதிர்காலம் என்னாகும். இதுசிறுவர்உரிமைமீறும்_செயலாகும்.
இவர்களின் வாழ்க்கைத்தரம் மாற்றப்பட வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக அரசு வழங்கும் நிதி ஒதுக்கீட்டில் கோயில்களுக்கு மதில் கட்டவும் கோயில்களை புனருத்தாபனம் செய்யவும் என்று செலவு செய்வதுடன் நிற்காமல் இவ்வாறானவர்களை இந்நிலையில் இருந்து மீட்கவேண்டும்.
கோயில்களுக்கு செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை அதை உங்களது சொந்தப் பணத்தில் செய்யுங்கள். கடைத் தேங்காய தெருப் பிள்ளையாருக்கு உடைக்க வேண்டாம்.
அபிவிருந்திக்கு அரசு ஒதுக்கிய பணத்தில் கிராமங்கள் தோறும் மகளீர் சுய உதவிக் குழுக்களை ஆரம்பித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றுங்கள்.
என சமூக ஆர்வலர்கள் தமது ஆதங்கத்தை வெளிட்டு வருகின்றனர் .