திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரக் கடலில் காணாமல் போனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மீனவர் வெருகல் இலங்கைத்துறை முகத்துவாரத்தைச் சேர்ந்த பாலசிங்கம் பரமானந்தம் என்ற 28வயதுடையவராவார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இலங்கைத்துறை முகத்துவாரக் கடலில் இருந்து படகொன்றில் ஏழு மீனவர்கள் பயணித்த நிலையில் இயந்திரக் கோளாறு ஏற்பட படகு நீரிழ் மூழ்கியுள்ளது.
இதன்போது ஏழு மீனவர்களில் ஆறுபேர் நீந்தி கரையை வந்தடைந்துள்ளனர்.ஒரு மீனவர் கடலில் அள்ளுண்டு காணாமல் போயிருந்த நிலையில் அவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.