கிளிநொச்சி, ஜெயந்திநகர் பகுதியில் தாயும் மகனும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் தாயும் மகனும் காயங்களுடன் இறந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். குறித்த சம்பவம் இரவு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் உள்ள உயிரிழந்த நபர்கள் வசிக்கும் வீட்டிலிருந்தே இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் 70வயது மதிக்கதக்க விஷ்னுகாந்தி வள்ளியம்மை என்ற தாயாரும், அவரது மகனான 34 வயதான விஷ்னுகாந்தி லிங்கேஷ்வரன் என்ற இளைஞருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.