வவுனியாவில் சுழற்சிமுறையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் 888 ஆவது நாளாக ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்ட பேரணியொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மதியம் 12 மணியளவில் வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து விசேட வழிபாடுகளை மேற்கொண்ட காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள், கந்தசாமி கோவில் வீதி வழியாக மணிக்கூட்டு கோபுரசந்தியை அடைந்து அங்கிருந்து கண்டி வீதி வழியாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் இடத்தை சென்றடைந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாணக்கியம், நல்லிணக்கம், ராஜதந்திரம், யாவும் இனப்படுகொலையே என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியிருந்ததுடன், அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் கைகளில் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.