மகளின் திருமணம்: ஒரு மாதம் பரோலில் வந்த நளினி!

0
422

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் கடந்த 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்குமே விசாரணை நீதிமன்றத்தில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அந்த தண்டனையை உச்சநீதிமன்றம்  பல்வேறு காலகட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது. 

அதுமட்டுமின்றி, அவர்கள் அனைவரும் ஆயுள் தண்டனை காலமான 14 ஆண்டுகளை ஏற்கெனவே சிறைகளில் கழித்துவிட்டதால், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளின்படி அவர்களை விடுதலை செய்யலாம் என்று கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், அவர்களை விடுவிப்பதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், அவர்களை விடுதலை செய்ய முடியவில்லை.

இந்நிலையில், வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக 6 மாத பரோல் வழங்குமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘ஊடகங்களிடம் பேசக்கூடாது…’ என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன், அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டது. 

இதையடுத்து, வேலூர் சிறையிலிருந்து இன்று (25 ஆம் திகதி) காலை வெளியே வந்த நளினியை, பலத்த பாதுகாப்புடன் பொலிஸார் சத்துவாச்சாரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, சிங்கராயர் என்பவரின் வீட்டில் நளினி தங்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here