இன்று வியாழக்கிழமை (ஜூலை 25) இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களிலும் கடும் வெப்பம் நிலவும் என தெரிவிக்கப்பட்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை 80 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை ‘ஜூலை மாதம் ஒன்றில் வரலாறு காணாத அளவுக்கு’, 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் பரிஸ் உட்பட இல்-து-பிரான்சின் எட்டு மாவட்டங்களும் இந்த சிவப்பு எச்சரிக்கைக்குள் அடங்கும்.
எச்சரிக்கைகளை வகைப்படுத்தும் வர்ணப்பிரிவு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து (2004) இதுவரை ஜூலை மாதம் ஒன்றில் இல்-து-பிரான்ஸ் மாகாணம் முழுவதும் சிவப்பு வண்ண எச்சரிக்கையை சந்தித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Paris,
Seine-et-Marne,
Val-de-Marne,
Yvelines,
Hauts-de-Seine Seine,
Essonne,
Seine-Saint-Denis,
Val d’Oise,
Pas-de-Calais,
Nord,
Somme,
Aisne,
Oise,
Seine-Maritime,
Eure Eure-et-Loir,
Loiret,
Yonne,
Aube,
Marne
ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மேலும் 60 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நாளில் மொத்தமாக 80 மாவட்டங்களில் அதிகளவான வெப்பம் நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.