யாழ்.மானிப்பாயில் ஆவா குழு மீது பொலிஸார் சூடு: ஒருவர் பலி!

0
419

யாழ்ப்பாணம் – மானிப்பாயில் உள்ள சோதனைச் சாவடியை தாக்க முற்பட்ட ஆவா குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கூரான ஆயுதங்களுடன் அவர்கள் தாக்குதலில் ஈடுபட முற்பட்டதால் பொலிஸார் அவர்களைத் தாக்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை,

3 உந்துருளிகளில் 6 பேர் கொண்ட கும்பல் பயணித்ததாகவும் காவலில்  ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களை வழிமறிக்க முற்பட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here