கினிகத்தேனையில் 10 வியாபார நிலையங்கள் திடீரென தாழிறங்கியுள்ள நிலையில், அதில் சிக்குண்ட ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மலையகத்தில் நேற்று (18)முதல் ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டினால் கினிகத்தேனை பிரதான நகரில் 10 வியாபார நிலையங்கள் திடீரென தாழிறங்கியுள்ளன. இதில் சிக்குண்ட ஒருவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கினிகத்தேனையை சேர்ந்த கே.எம். ஜமால்டீன் (60) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.