பிரான்சு பாரிஸ் நகரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள மேதின ஊர்வலம் முடிவடையும் இடம் மாற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிற்பகல் 13.00 மணிக்கு Place de la republique பகுதியில் ஆரம்பமாகி Nation பகுதியைச் சென்றடையும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்னர் Place de la republique பகுதியில் இருந்து ஆரம்பமாகி Bastille பகுதியை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் பிரான்சு அரச தரப்பினரால் குறித்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மேதின ஊர்வல ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதனை பிரான்சு வாழ் தமிழ் மக்கள் கருத்தில் எடுத்து ஊர்வலத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.