தமிழ் தேசத்தையும் மக்களையும் நேசித்தவரும் செம்பகம் தமிழ்தேசிய செயற்பாட்டுக்குழுமம் தீவககோட்ட செயற்பாட்டாளர்களில் ஒருவருமான அமரர் திருநாவுக்கரசு சிவமாறன் (மாறன்) அவர்கள் இன்று புற்றுநோய் காரணமாக சாவடைந்துள்ளார்.

அமரர் மாறன் அவர்கள் ஒரு மாற்றுத்திறனாளியாக இந்த மண்ணிலே பிறந்து இருந்த போதும் தமிழ் மக்களுடைய விடுதலைக்காக முழு மூச்சுடன் இறுதிக் காலம் வரை வாழ்ந்தவர்.
கிளிநொச்சி சந்தையின் வர்த்தகர் சங்கத்தின் பிரதித் தலைவராகவும்
கிளிநொச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்து சேவைசெய்தவர்.
மாறன் அவர்க் பேச்சாற்றல் மிகுந்த சமூகப் போராளியாக செயற்பட்டதுடன் தீவக கோட்டத்தின் மாவீரர் செயற்பாட்டு குழுவை நிறுவி அதனூடாக மாவீரர்களின் நினைவு நிகழ்வுகளை நிகழ்த்திய தமிழ்பற்றாளர்.
தீவகம் புங்குடுதீவை சேர்ந்த இவர் தற்போது கிளிநொச்சி உதயநகரில் வசித்து வந்தார். இவரின் சகோதரன் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் படையணியின் இளநிலை தாக்குதல் தளபதிகளில் ஒருவரான லெப்டினன் கேணல் ராணிமைந்தன் ஆவார் .
அன்னாரது இழப்பானது தமிழ்தேசத்திற்கு பேரிழப்பாகும் .
அன்னாரின் ஆத்மா சாந்தி பெற பலரும் வேண்டி நிற்பதுடன் அஞ்சலி செலுத்துகின்றனர்.

