கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து கொழும்பில் சிகிச்சை பெற்று வந்த மட்டக்களப்பு கூழாவடியைச் சேர்ந்த கிழக்குப் பல்கலைக் கழக மணவியான உமாசங்கரி கடந்த வியாழக்கிழமை 11ம் திகதியன்று மரணமானார்..
மட்டக்களப்பு – கூழாவடியைச் சேர்ந்த 22 வயதுடைய கருணாகரன் உமாசங்கரி எனும் பெண்ணே உயிரிழந்தவராவார்
இவர் கிழக்கு பல்கலை கழகத்தில் கலைத் துறையில் கல்வி பயின்றுவந்த மாணவியாவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் இறை ஆராதனைகள் சனிக்கிழமை (13ம் திகதி ) கூழாவடி 8ம் குறுக்கிலுள்ள இல்லத்தில் நடைபெற்று ஊறணி பொது மயானத்தில் இறை வழிபாட்டுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இதன்போது சீயோன் தேவாலய , மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், கிழக்கு பல்கலை கழக மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
கருணாகரன் உமாசங்கரி எனும் மாணவியோடு மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர் 31 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.