முல்லைத்தீவில் வீசிய கடும் சூறாவளியினால் உடமைகள் சேதம்!

0
453

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை வீசிய கடும் சூறைக் காற்றினால், வீடுகள் ,உடமைகள்
பல சேதமடைந்துள்ளன.


முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் நேற்றுமுன்தினம் மழை பெய்தது. நேற்றுமுன்தினம் மாலை 4.30 மணியளவில் மாங்குளம் பகுதியில் வீசிய கடும்
காற்றினால் வீதியோரங்களில் நின்ற மரங்கள் பல முறிந்து விழுந்து வீதியில் போக்குவரத்துத் தடைபட்டது.
பயன்தரு மரங்கள் பலவும் நாசமாகியுள்ளன.
மாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 9 வீடுகளும்
தச்சடம்பன் பகுதியில் ஒரு வீடும் புலுமச்சிநாதகுளம் பகுதியில் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
சேதமடைந்த வீடுகளை ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த.அகிலன், மாங்குளம் கிராம அலுவலர் தனபால்ராஜ், அம்பகாமம் பதில் கிராம அலுவலர் ரஞ்சிதகுமார்,
புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் மு.முகுந்தகஜன், கிராம மட்ட அமைப்பு
களின் பிரதிநிதிகள் உள்ளிட்
டவர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here