யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் பெளத்த விகாரை, தியான மண்டபம் என்பவற்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள் ளன.
அறிவியல் நகரிலுள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல்,தொழில்நுட்ப பீடம் மற்றும் கிளிநொச்சி விவசாய பீடத்தில் தற்போது சுமார் 600 சிங்கள மாணவர்கள் கல்வி கற்கின்றனர் எனக் கூறப்படுகிறது. இவர்களின் வழிபாட்டு வசதிக்காக விகாரை அமைக்க ஓர் ஏக்கர் நிலத்தைப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவியல் நகர் வளாகத்தில் ஒதுக்கியிருந்தது. சரசவி விகாரையயன்ற பெயரில் இடம்பெறும் கட்டுமானப் பணிகளுக்கு வெளிநாட்டு வாழ் சிங்களவர்களும் நிதியளித்து வருகிறார்கள். அங்கு எட்டு போதி மரங்களும் நடப் பட்டுள்ளன.