வவுனியாவில் தொடருந்து விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!

0
612

வவுனியா – புதூர், புளியங்குளம் பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியா – புதூர், புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த இலகநாதன் நர்மதன் (வயது 19) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று மாலை 3.30 மணியளவில் சென்ற கடுகதி தொடருந்து புதூர் ஆலயப்பகுதியில் வைத்து உந்துருளியில் சென்ற இளைஞன் மீது மோதியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நேற்று இரவு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிழந்துள்ளார்.

குறித்த விபத்து இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்துக்கடவையை பாதுகாப்பான கடவையாக மாற்றி அமைத்துத்தருமாறு பலரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வு பெற்றுத்தரவில்லை எனவும் இதனால் அப்பகுதியில் இடம்பெற்ற இரண்டு விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here